என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆவின் பொருட்கள்"
- சென்னை மற்றும் அனைத்து ஒன்றியங்களிலும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும்.
- விற்பனைப் பிரிவு அலுவலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை:
ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆவின் விற்பனைப் பிரிவுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை மற்றும் அனைத்து ஒன்றியங்களிலும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும். மாவட்ட ஒன்றியங்களில் உற்பத்தி செய்யப்படும் பால் உபபொருட்களின் தேவையின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் சந்தைப்படுத்த ஆலோசனை வழங்கினார். மேலும் சந்தையில் நுகர்வோர் விரும்பும் பொருட்கள் குறித்து கள ஆய்வு மேற் கொண்டு அறிக்கையை தயார் செய்திட அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் பால்வளத் துறை இயக்குனர் டாக்டர் வினித் மற்றும் விற்பனைப் பிரிவு அலுவலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டார். கொள்முதல் மூலம் அரசுக்கு ரூ.77 கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் கூறினார்.
- குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடம் கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்காகவே ஆவினில் இருந்து வாங்க எடுக்கப்பட்ட முடிவை நிராகரித்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
சென்னை:
தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.
அதில் இடம் பெற்றுள்ள 'ஹெல்த் மிக்ஸ்' தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஆனால் தனியாரை விட குறைந்த விலைக்கு ஆவின் நிறுவனத்தில் வாங்குவதற்கு வல்லுனர் குழு முடிவு செய்துள்ளது.
ஆனால் அந்த முடிவை திடீரென்று நிராகரித்து மீண்டும் பழைய நிறுவனத்திடம் இருந்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டார். இந்த கொள்முதல் மூலம் அரசுக்கு ரூ.77 கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் கூறினார்.
குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடம் கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்காகவே ஆவினில் இருந்து வாங்க எடுக்கப்பட்ட முடிவை நிராகரித்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். அவர் கூறும்போது, "ஆவின் பொருட்கள் ஊட்டச்சத்து நிறைந்தது அல்ல என்றார்.
இதற்கு பதில் அளித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, இன்னும் டெண்டர் உறுதி செய்யப்படாத நிலையில் முறைகேடு எப்படி நடக்கும்? மேலும் ஆவின் ஹெல்த் மிக்ஸ் என்பது பால் மற்றும் டீயில் கலந்து குடிப்பதுதான். அது கர்ப்பிணிகளுக்கு வழங்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது அல்ல என்றார்.
இந்த நிலையில் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
அதன் பிறகு அமைச்சர் நாசர் கூறும்போது, "ஐ.பி.எஸ். படித்த அதிகாரியான அண்ணாமலை உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து இருக்கிறார்" என்றார்.
கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்துக்களுடன் ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பது ஆவினில் இதுவரை தொடங்கவில்லை.
அவ்வாறு தயாரித்து வழங்க சுகாதாரத்துறை கேட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. அந்த ஆய்வு முடிவுகள் வந்து அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே தயாரிக்க முடியும். அதன் பிறகுதான் சுகாதாரத்துறை கொள்முதல் செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்